Wednesday, April 16, 2008

கம்ப்யூட்டர் மெக்கானிக்காக எனது அனுபவம்.

எப்படியோ கஷ்டப்பட்டு படித்து எனது இன்ஜினியரிங்ஐ முடித்தேன். கம்ப்யூட்டர் ஹர்ட்வர் இன்ஜினியர்ராக ஒரு வேளையில் சேர்ந்தேன். முதலில் எங்கு சென்றாலும் என்னுடன் சீனியர் இன்ஜினியர் ஒருவர் வருவார். அதனால் நான் எதை பற்றியும் கவலைப்பட்டது கிடையாது. எல்லாம் அவர் பார்த்து கொள்வர். சிறிது கலாம் இப்படியே ஓடியது. பிறகு தனியாக செல்ல வேண்டிய நிலை வந்தது..... அன்று ஒரு கஷ்டமரிடம் இருந்து அழைப்பு வந்தது .. எங்களது ஒரு கம்ப்யூட்டர் வொர்க்காகவில்லை என்று அவர் சொன்னார். அந்த சமையம் எங்களது கம்பெனியில் சீனியர் யாரும் இல்லை. நான் மட்டும் தான் இருந்தேன். அதனால் என்னை அனுப்பிவைத்தார்கள். எனக்கு என்றால் பயம் இன்ன அளவு என்று இல்லை.... எனது ஆபீஸ்சில் இருந்து புறப்டேன். போகும் வலியிலேயே அயரதெட்டு யோசனை போகலாமா... வேண்டாம்மா... போனால் என்ன ஆகுமோ... இப்படியே வேலையை விட்டு விட்டு ஓடி விடலாமா... என்றெல்லாம். யோசித்து கொண்டே அந்த இடத்தை சென்று அடைந்தேன். சிறிது தைரியத்தை வரவழைத்து கொண்டு உள்ளே சென்றேன். நான் கம்ப்யூட்டர் சர்வீஸ் கம்பெனியில் இருந்து வருவதாக என்னை அறிமுகம் செய்து கொண்டேன். பயங்கர மரியாதயுடன் உள்ளே அழைத்தார்கள். பழுதான கம்ப்யூட்டரை கட்டினார்கள். நான் அங்கு சென்று கம்ப்யூட்டரை ஆன் செய்தேன். ஒன்றுமே வரவில்லை. டிஸ்ப்ளே ப்ரோப்லேமாக இருக்குமோ என்று நினைத்து மாணிடரை மாற்றி பார்க்கலாம் என்று யோசித்தேன்... பக்கத்தில் இருந்த இனொரு கம்ப்யூட்டர்ரின் மாணிடரை மாற்ற முயச்சி செய்தேன். அனால் என்னுடன் இருந்தவர் அதற்கு அனுமதிக்கவில்லை. அவர் அந்த மாணிடரை காட்டி என்னுடைய டேடா எல்லாம் இதில் தன் உள்ளது என்றார். நான் சொல்லும் விளக்கங்களை ஏற்று கொள்ள அவர் தயாராக இல்லை. எதையும் மாற்றாமல் சரி செயுங்கள் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். எனக்கு என்ன செய்வதென்று தெரியாமல் மானிடர் பவர் பட்டனை ஆன் ஆப் செய்து கொண்டிருந்தேன். பவர் பட்டன் அருகில் ரோடேசன் பட்டன் இருந்தது. தற்செயலாக அதை ரோடேஇட் செய்தேன், மாணிடரில் டிஸ்ப்ளே வந்தது. அப்புறம் தான் தெரிந்தது அது brightness பட்டன் என்று. அப்போது தான் எனக்கு தெரிந்தது இப்படியும் ப்ரோப்லேம்ஸ் வரும் என்று. அந்த யுசெர் வந்து நன்றி மேல் நன்றி கூறினார். மனதிற்குள் எனக்கும் சந்தோசம். ஒன்றும் செய்யாமல் சாதித்து விட்ட திருப்தி உடன் வெளியே வந்தேன்.

திரும்பவும் நாளை பொழுது எப்படி இருக்குமோ என்று மனதில் பீதியை கிளப்பியது.

3 comments:

Divya said...

\\ போனால் என்ன ஆகுமோ... இப்படியே வேலையை விட்டு விட்டு ஓடி விடலாமா... \\

தெளிவாக உணர்த்துகிறது , நீங்க எவ்வளவு பயந்திருந்தீங்கன்னு!!

\\ஒன்றும் செய்யாமல் சாதித்து விட்ட திருப்தி உடன் வெளியே வந்தேன்.

திரும்பவும் நாளை பொழுது எப்படி இருக்குமோ என்று மனதில் பீதியை கிளப்பியது.\

இன்னும் பயம் தீரவில்லையா??

பாவம் உங்க கஸ்டமர்ஸ்!!

Divya said...

என் வலைதளம் வந்தமைக்கு ரொம்ப நன்றி !!

[word verification remove paniteenganna........tamil la comment potutu poga vasathiya irukkum]

கருப்பன் (A) Sundar said...

கசமுசானு ஒரே Paraவா எழுதாமல் Paragraph Paragraphஆ எழுது அது தான் படிக்கிறதுக்கு ஈசி.