Friday, October 30, 2009

சுற்றுலா-ஒக்கேனக்கல்

பெங்களூர் - ஒக்கேனக்கல் பயணம்
பெங்களூரில் இருந்து காலை 6:00 மணிக்கு இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டு ஓசூர், தேன்கனிகோட்டை வழியாக 10 மணிக்கு ஒக்கேனக்கல் சென்று அடைந்தோம். இரு சக்கர வாகனத்தில் செல்ல இது சிறந்த வழி , பஸ், லாரி போன்ற பெரிய வாகனங்கள் அதிகமாக வருவது இல்லை, சாலையும் நன்றாக உள்ளது. ஒக்கேனக்கல் சென்றதும் நிறைய பரிசல் ஓட்டிகள் வந்து எங்களை மொய்தனர். நாங்கள் 1௦0 பேர் சென்றோம். 1500 ரூபாய் கேட்டனர், வேண்டாம் என்று சொன்னதும், பேரம் பேச ஆரம்பித்தனர். ரூபாய் 800 தருவதாக பேசினோம். ஒருவழியாக 850 ரூபாயாகவும், நீங்கள் மகிழ்சி அடைந்தால் அதிகம் 100 ரூபாய் தருமாறு கேட்டார். நாங்கள் சரி என்று சொன்னோம். அவர் கர்நாடக - தமிழ்நாடு எல்லை பகுதிக்கு அழைத்து சென்றார், நாங்கள் நீண்ட நேரம் அங்கு செலவளித்தோம், அவர் காத்திருந்து எங்களை அழைத்து வந்தார். நாங்கள் 950 ரூபாய் கொடுத்து விடை பெற்றோம்.